இலங்கையில் தேசிய பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயு கம்பனியொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2007 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் தேசிய பெட்ரோலிய மற்றும் வாயுக்கள் கம்பனியை நிறுவுவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2011 தொடக்கம் 2013 வரைக்குமான காலப்பகுதியில் மன்னார் அகழி ஆ2 நிலப்பரப்பின் ஒரு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கமைய, நாட்டில் பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயுப் படிமம் காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பெட்ரோலிய பொருட்கள் மற்றும் இயற்கை வாயுக்களை உற்பத்தி செய்வதன் மூலம் உள்நாட்டு தேவைகளுக்கு சுவட்டு எரிபொருட்கள் நிறுவனங்கள் மீது தங்கியிருக்கும் நிலையைக் குறிப்பதற்கும், எதிர்காலத்தில் இயற்கை வாயு ஏற்றுமதியாளராக மாறுவதன் மூலம் அந்நிய செலாவணியைப் பெற்றுக்கொள்வதற்குமான வாய்ப்புக் கிடைக்கும் என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கம்பனியின் நிர்வாகக் கம்பனியாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.