January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் உரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி

File photo: Twitter/ srilankabrief

இலங்கையல் ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் உரிய சட்டத் திருத்தங்கள், கொள்கை வகுப்புக்கள் மற்றும் ஒழுக்க விதிகளைத் தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரச மற்றும் தனியார் துறை ஊடகங்கள், சந்தைப்படுத்தல், கல்வி ரீதியான, சட்டங்கள், நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் அனுபவம் வாய்ந்த நபர்களின் பிரதிநிதித்துவத்துடனான குழுவொன்றை நியமிப்பதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்காக சமகாலத்திற்குப் பொருத்தமான வகையில் ஊடகவியலாளர்களுக்கும் வெகுசன ஊடகங்களுக்கும் ஏற்புடையதாகக் காணப்படும் சட்டத் திருத்தங்கள் மற்றும் கொள்கைகள் மற்றும் ஒழுக்கவிதிகளைத் தயாரிக்க வேண்டிய தேவையை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.