
உள்ளூராட்சிமன்ற தேர்தலை விரைவில் நடத்தத் தேர்தல் ஆணைக்குழு தயாராகி வருகிறது.
உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு அவசியமான அரசியலமைப்பு சார் ஏற்பாடுகளைச் செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு பணிப்புரை வழங்கியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் தேர்தலுக்கான ஆரம்ப ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
வாக்குச் சீட்டைத் தயார் செய்தல், அதிகாரிகள், வாகனங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தேர்தல் நிலையங்களின் குறைபாடுகளை அடையாளம் கண்டு, நிவர்த்தி செய்தல் போன்றவற்றில் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
வாக்காளர் அட்டையில் பதியப்படாதவர்களை டிசம்பர் 3 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்துகொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது.