July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தடை செய்யப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடனும் பேசுவது அவசியம்’

புலம்பெயர் தமிழ் அமைப்புகளை மட்டுமல்ல சிங்கள, முஸ்லிம் புலம்பெயர் அமைப்புகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.அதேபோல் தடை செய்யப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவன் மூலமே அவர்களின் நிலைப்பாடும் என்னவென்பது தெரிந்துகொள்ள முடியும் என ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க சபையில் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இரண்டு ஆண்டுகால ஆட்சியில் தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலான சவால்களையும் சமாளித்து நாட்டை நிருவகிக்க நேர்ந்துள்ள நிலையில், பாரிய அளவிலான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளார் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடனும், ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸவுடனும் இதற்கு முன்னரான காலகட்டத்தில் இருந்து நெருக்கமாக நான் செயற்பட்டுள்ளேன். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இந்த இருவரும் எவ்வாறு செயற்பட்டனர் என்பதை நான் நேரடியாக பார்த்த நபர்.இவர்கள் இருவரும் இல்லையென்றால் இன்று யுத்தம் முடிவுக்கு வந்திருக்காது.

இன்று கொவிட் குறித்து பேசுகின்றோம். அன்று விடுதலைப் புலிகளை அழிக்காது, பிரபாகரனை அழிக்காது விட்டுவைத்திருந்தால் இன்று நாடு இரண்டாக பிளவுபட்டிருக்கும்.அதற்கு இடமளிக்காது தடுத்து நிறுத்திய தலைமைத்துவம் அவர்களை சார்ந்தது என்றார்.