
தாம் 48 மணிநேர அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக தாதியர் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
நாளை மற்றும் மறுநாள் இவ்வாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
தமது தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாத காரணத்தினால் அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக சுகாதார நிபுணர்கள் சம்மேளனத்தின் அமைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கமும் சுகாதார அமைச்சரும் தமது நியாயமான பிரச்சினைகளுக்கு செவிதாழ்த்தத் தவறியதாக அவர் தெரிவித்துள்ளார்.