July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச நாணய நிதியத்துடனான தகவல்களை வெளியிடுமாறு ரணில் கோரிக்கை!

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு இலங்கை கட்டுப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போது உரையாற்றிய போதே ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார்.

“இந்த ஆண்டு டிசம்பரில் ஐ.நா. நாணய மற்றும் நிதி மாநாட்டின் நான்காவது பிரிவின் கீழ் ஐ.நா.வுடன் பேச்சுவார்த்தைக்கு இலங்கை செல்ல வேண்டியுள்ளது என தெரிவித்த அவர், இந்த பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

“இலங்கை அரசாங்கத்தினதும், சர்வதேச நாணய நிதியத்தினதும் சித்தாந்தங்கள் மற்றும் இரு தரப்பினரும் செய்து கொண்ட உடன்படிக்கைகள் குறித்த விவரங்களை அறிய நாடாளுமன்றத்துக்கு உரிமை உள்ளது’’ என்றார்.

அத்தோடு ஜனாதிபதியின் செலவினப் பிரிவுகளில் இருந்து ஜனாதிபதி செயலணிக்கு செலவிடுவது சட்டவிரோதமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்திற்கு பொறுப்பான அமைச்சரவையின் அனுமதியின்றி செயலணிகள் நியமிக்கப்பட்டன. செயலணிகள் பாராளுமன்றத்திற்கு பொறுப்பல்ல. எனவே, இத்தகைய பணிக்குழுக்களுக்காக செலவு செய்வது சட்டவிரோதமானது,” என்று அவர் வலியுறுத்தினார்.