இலங்கையின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டிற்கு அண்மையாக கீழ் வளிமண்டலத்தில் தற்போது காணப்படும் தளம்பல் நிலை அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு குறைந்த அழுத்தம் நிலவும் பிரதேசத்தில் 100 மில்லி மீற்றர் வரையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலனறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை உள்ளிட்ட 10 மாவட்டங்கள் காலநிலை தொடர்பான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வானிலை முன்னெச்சரிக்கை நாளை பிற்பகல் 2.30 மணி வரை தொடரும் என திணைக்களம் அறிவித்துள்ளது.