May 26, 2025 1:12:28

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘புதிய அரசியலமைப்பு வரைவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதிப்போம்’: பிரதமர் மகிந்த

புதிய அரசியலமைப்பு வரைவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் செலவுகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதில் எவ்வித இரகசியமான விடயங்களும் இல்லை எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தருணத்தில் நாட்டின் எதிர்காலத்திற்காக கூட்டாக தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

கொவிட் தொற்றினால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் இப்போது திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி சாதகமான கருத்துக்களை கூறினால், தாம் அவற்றிற்கு செவிமடுக்க தயாராக இருப்பதாகவும் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.