இலங்கையில் கொவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு குறித்து சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இது நாடு எதிர்கொள்ள உள்ள கொவிட் நெருக்கடியின் முன் எச்சரிக்கையாக இருக்கலாம் என்று அவர் செய்தியாளர்களிடம் உரையாற்றும் போது கூறினார்.
தற்போதைய சூழ்நிலையை புரிந்து கொள்வது கடினமாக இருந்த போதும் இது தொடர்பில் அதிக கவனம் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தொற்று நோயியல் பிரிவில் உள்ள ஒரு தனி குழு இறப்புக்கள் அதிகரித்தமைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து எதிர்காலத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என அவர் மேலும் கூறினார்.
எவ்வாறாயினும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள சூழ்நிலையில் மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு டாக்டர் ஹேரத் அறிவுறுத்தினார்.
நாடு கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்திய நவம்பர் மாத தொடக்கத்தில் கொவிட் இறப்புகள் எண்ணிக்கை 20க்கும் குறைவாக பதிவாகியது.
எனினும் திங்கட்கிழமை (22) தினசரி இறப்பு எண்ணிக்கை , 31 ஆக அதிகரித்தது. இத்தோடு நேற்றைய தினம் 735 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியது.