அமெரிக்கத் தூதுவராக தான் பதவியேற்கவுள்ளாக முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் நாட்களில் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கத் தூதுவராக பதவியேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் கோரிக்கை விடுத்த நிலையில், அதனை தான் ஏற்றுக்கொண்டு இம்மாதம் 29 ஆம் திகதி அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புரிமையை மீண்டும் அமெரிக்கா பெற்றுக்கொள்வதால், அதன் தலைமைப் பதவியையும் அந்நாடு பெற்றுக்கொள்ளும் எனவும் இதனால் அமெரிக்காவுடனான இலங்கையின் நட்புறவை பலப்படுத்தும் நோக்கில் தான் தூதுவராக அங்கு செல்லத் தீர்மானித்துள்ளதாகவும் மகிந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.