September 28, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் வைரஸ் தடுப்பு மாத்திரையை தனியார் மூலம் இறக்குமதி செய்ய முடிவு!

வாய்வழி கொவிட் வைரஸ் தடுப்பு மாத்திரையான ‘மோல்னுபிராவிர்’ (Molnupiravir) இறக்குமதி செய்ய தனியார் நிறுவனங்களுக்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக இலங்கையில் வாய்வழி கொவிட் வைரஸ் தடுப்பு மாத்திரையான ‘மோல்னுபிராவிர்’ (Molnupiravir) பயன்படுத்தப்படுவதற்கு, கொவிட்-19 தொழில்நுட்பக் குழு அனுமதி வழங்கியிருந்தது.

இந்த மருந்தை சில தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்வதற்கு ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாக, உற்பத்தி, வழங்கல் மற்றும் மருந்துகளை ஒழுங்குபடுத்தும் இராஜாங்க அமைச்சா் சன்ன ஜெயசுமன டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.

எனினும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டதன் பின்னர், மருந்து மதிப்பீட்டுக் குழுவின் அனுமதியுடன் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுவதோடு, விலை நிர்ணயிக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

மெர்க்கின் ‘மோல்னுபிராவிர்’ கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்ட முதலாவது வாய்வழி வைரஸ் தடுப்பு மருந்து ஆகும்.

ஆய்வுகளின்படி இந்த மருந்து கொவிட் தொற்றின் பாதிப்பை 50 வீதமாக குறைக்கின்றது.