திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இடம்பெற்ற ‘படகுப் பாதை விபத்தைத் தொடர்ந்து, அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, மீட்கப்பட்ட 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கின் வீடு பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா மக்கள் பிரதான வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிஞ்சாக்கேணி பாலம் அமைப்புப் பணிகளில் உள்ள கால தாமதத்தால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாலத்தின் நிர்மாணப் பணிகள் கால தாமதமாகுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் காரணம் எனத் தெரிவித்தே, அவரது வீடு தாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலும் சிலர் நீரில் மூழ்கி காணாமல் போயிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மக்களும் கடற்படையினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.