April 27, 2025 16:14:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதலின் 25 பிரதான சந்தேகநபர்கள் மீதான வழக்கு விசாரணை ஜனவரி வரை ஒத்திவைப்பு

ஈஸ்டர் தாக்குதலின் 25 பிரதான சந்தேகநபர்கள் மீதான வழக்கு விசாரணை 2022 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தம் மீதான குற்றப் பத்திரங்கள் தமிழில் வாசிக்கப்பட வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் தெரிவித்ததை அடுத்தே, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குற்றப் பத்திரங்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்கு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரின் சட்டத்தரணிகளும் இன்று வழக்கில் ஆஜராகத் தவறியுள்ளனர்.

கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.