பாராளுமன்றத்தில் இன்று, ஆளும் கட்சி உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கும் சமிந்த விஜேசிறி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே முறுகல் நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.
இதனால் சபையில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது.
இன்று காலை சபை நடவடிக்கைகள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியதை தொடர்ந்து, கடந்த 20 ஆம் திகதி திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பி சபையில் பெண்கள் தொடர்பில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பில் சபாநாயகர் அறிவித்தார்.
இதன்போது சபையில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டதுடன், சமிந்த விஜேசிறி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திஸ்ஸ குட்டியாராச்சியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இவ்வேளையில் சபைக்கு நடுவே வந்த சமிந்த விஜேசிறி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வந்த நிலையில், திஸ்ஸ குட்டியாராச்சியும் சபைக்கு நடுவே வந்தார். இதன்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் அவர்களுக்கு நடுவே சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் படைக்கல சேவிதர் உள்ளிட்டோர் நிலைமையை கட்டுப்படுத்தினர்.