
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் மதனி காலமானார்.
அண்மைக் காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமாகியுள்ளார்.
உயிரிழக்கும் போது அவரது வயது 71 ஆகும்.
அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் மதனி கப்பூரிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலைவரும் ஆவார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்பது இலங்கை முஸ்லிம் மதத் தலைவர்களின் ஒன்றிணைந்த அமைப்பாகும்.