November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நெற் செய்கைக்கு இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்படவில்லை!

நெற் செய்கைக்கு இரசாயன உரத்தை இறக்குமதி செய்வது தொடர்பில் ஜனாதிபதியுடன் இன்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இன்று (22) பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போது உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.

எனினும் மழையினால் சேதமடைந்த மரக்கறி பயிர்களுக்கு மாத்திரம் சில உரங்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நானோ நைட்ரஜன்  ஒப்பந்தத்தின் போது உரத்தின் இறக்குமதி விலையை குறைத்ததன் மூலம் 1.7 பில்லியன் ரூபாய் சேமிக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிராந்திய அபிவிருத்தி இல்லாமல் எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த அபிவிருத்தியையும் எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதாக அவர் மேலும் கூறினார்.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஒவ்வொரு வருடமும் மரக்கறி விலை உயரும். இதனிடையே கனமழையை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டதால் இந்த நிலைமை  ஏற்பட்டுள்ளது.

கோத்தாபய ராஜபக்ச மணல் மோசடி செய்ததை நிரூபித்தால் தான் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சவால் விடுத்தார்.