அமைச்சரவையில் பூனைகளாக உள்ளவர்கள் வெளியே சென்று சிங்கங்களாக மாறுவதாக ஆளும் கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் உள்ள பங்காளிக் கட்சிகளுக்கு இடையே மீண்டும் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளவே சில பங்காளிக் கட்சிகள் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
அரசாங்கம் மீது விமரசனங்கள் இருந்தாலும் அவற்றை அரசாங்கத்திற்குள் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆளும் கட்சியின் பின் வரிசை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தில் சில தவறுகள் இடம்பெறுவது குறித்து நாமும் முரண்படுகிறோம். ஆனால், அவற்றை உடனடியாக திருத்திக்கொள்ள அரசாங்கத்தில் உள்ள மேலிடத்திற்கு முறையாக கொண்டு சேர்க்கின்றோம். மாறாக வெளிப்படையாக விமர்சித்து அரசாங்கத்தை பலவீனப்படுத்த நாம் முயற்சிக்கவில்லை
என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டு வருகின்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.