விசேட உர வகையொன்றை இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாட்டில் உரம் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி, விவசாய அமைச்சர் மற்றும் விவசாயத்துறை சார் அதிகாரிகளுடன் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள உரப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.
இந்நிலையில், மரக்கறி வகைகளுக்கு கிறுமி நாசினிகளையும் விசேட உர வகையொன்றையும் இறக்குமதி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உரத் தட்டுப்பாட்டைச் தொடர்ந்து விவசாயிகள் பயிற்ச் செய்கையைக் கைவிட்டுள்ளனர்.
அத்தோடு, இலங்கையில் மரக்கறி வகைகளின் விலை அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.