May 24, 2025 1:38:02

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறில் காமினி ஆயருக்கு ஆதரவாக கத்தோலிக்க ஆயர்கள் சிஐடியிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

சிறில் காமினி ஆயருக்கு ஆதரவாக கத்தோலிக்க ஆயர்கள் சிஐடியிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

சிறில் காமினி ஆயர் மூன்றாவது தடவையாகவும் வாக்குமூலம் வழங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆயர் வெளியிட்ட கருத்து ஒன்றை அடிப்படையாக வைத்து, சிஐடி விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

சிறில் காமினி ஆயர் ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கேட்டதாகவும், நீதி கேட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கத்தோலிக்க ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களை மேலும் துன்புறுத்தப்படுவதை சகிக்க முடியவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.