விவசாயத்துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தீர்க்கமான சந்திப்பொன்றை முன்னெடுக்கவுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள உரப் பிரச்சினையுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து ஜனாதிபதியின் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இரசாயன உர இறக்குமதி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பயிர்ச் செய்கைகள் பாதிக்கப்பட்டதோடு, மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்தன.
உரத் தட்டுப்பாடு காரணமாக தாம் பயிர்ச் செய்கையைக் கைவிட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
நாட்டின் நெருக்கடி நிலையில் விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான மாற்றுத் தீர்வுகள் குறித்து ஜனாதிபதியின் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.