இலங்கையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுக்கப்பு இன்று நடைபெறவுள்ளது.
நிதி அமைச்சரான பஷில் ராஜபக்ஷவினால் கடந்த 12 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்பிக்கப்பட்டதுடன், அதன் இரண்டாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் 13 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது.
இன்று மாலை 5 மணியுடன் அந்த விவாதம் முடிவடையவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு அதன் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதில் அரசாங்க தரப்பினரும், எதிர்க்கட்சியை சேர்ந்த சிலரும் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வாக்கெடுப்பின் பின்னர் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரையில் நடத்தப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து 10 ஆம் திகதி மாலை வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.