February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம் சென்ற மத்திய வங்கி ஆளுநர்

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

நேற்று மாலை அவர் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார்.

இதன்போது, மத்திய வங்கியின் சௌபாக்கியா கடன் திட்டத்தின் கீழ் பயனடைந்த அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, வசாவிளான் இயற்கை உர தோட்டம் உள்ளிட்ட சிலவற்றை பார்வையிட்டதுடன் அங்கு பயனாளிகளுடனும் அவர் கலந்துரையாடினார்.

இதேவேளை இன்று காலை இடம்பெறவுள்ள இலங்கை மத்திய வங்கியின் விசேட கலந்துரையாடலொன்றில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

This slideshow requires JavaScript.