January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெண் எம்.பி.யை பாலியல் வார்த்தைகளினால் சாடியதாக ஆளும்கட்சி எம்.பி. மீது குற்றச்சாட்டு!

பெண் எம்.பி ஒருவரை பாலியல் வார்த்தைகளினால் சாடியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி மீது பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது திஸ்ஸ குட்டியாராச்சி, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவது குறித்து கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவிற்கு எதிராக பாலியல் ரீதியான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

 

தற்போது இவரின் உரை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இவரின் கருத்துக்களுக்கு சமூக ஊடகப் பாவனையாளர்கள் கவலை எழுப்பியுள்ளதோடு, அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவருமான அம்பிகா சற்குணநாதன் பதிவிட்டுள்ளார்.

 

“இது ஆணாதிக்க செயல்” என அவர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.  பாலின வெறுப்பு மற்றும் நேர்மையற்ற நடத்தையை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.