பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2020 ஆம் கல்வி ஆண்டின் வெட்டுப் புள்ளிக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகைமை பெற்றுள்ள மாணவர்கள் இவ்வாறு பதிவு செய்யப்பட உள்ளனர்.
ஒவ்வொரு பல்கலைக்கழக மட்டத்திலும், இதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.