November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் இறக்குமதிக்கு இந்தியாவிடம் அவசர கடனுதவியைப் பெறத் தயாராகிறது இலங்கை

எரிபொருள் இறக்குமதிக்கு இந்தியாவிடம் அவசர கடனுதவியைப் பெற இலங்கை அரசாங்கம் தயாராகி வருகிறது.

இலங்கையின் டொலர் கையிருப்பு குறைந்துள்ள நிலையில், எரிபொருள் இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் அவசர கடனுதவியைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு டொலர் தட்டுப்பாடு நிலவுவதால், சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையமும் மூடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் எரிபொருள் இறக்குமதிக்கு 350 மில்லியன் டொலர் தேவைப்படுவதாக வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இறக்குமதிக்குத் தேவையான டொலரைத் தேடிக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இந்தியாவிடம் கடன் பெற அமைச்சரவை தீர்மானித்துள்ளது.