
இலங்கையில் ஒன்றிணைந்த பொது எதிரணி ஒன்றை உருவாக்கும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவண் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மொனராகல மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாளாந்தம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு பலமான பொது எதிரணி ஒன்று அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டமை நாட்டில் மேலும் அதிகமான பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் நிலவும் உள்ளக முரண்பாடுகள் காரணமாக ஆட்சி மாற்றமொன்று ஏற்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாட ஆரம்பித்தள்ளதாகவும் ருவண் தெரிவித்துள்ளார்.