June 17, 2025 9:22:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு தனியார் உணவகம் ஒன்றில் தீ விபத்து!

கொழும்பு தனியார் உணவகம் ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சுக்கு அருகில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எரிவாயு கசிவொன்றைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தால் கொழும்பு ரேஸ் கோஸ் பகுதியில் உள்ள உணவகத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் தீப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் கருவாத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.