தமிழ் தேசிய கூட்டமைப்பு, ரிஷாத், ஹக்கீம் ஆகியோரை இணைத்துக் கொண்டு ஆரோக்கியமான அரசியல் அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடாக நாம் பயணிக்க வேண்டும் என்றால், நாட்டுக்கு பொருத்தமான அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டும். எவரும் வெளி இனத்தவர் அல்ல. தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் அனைவரும் ஒரு நாட்டவர். இலங்கையர்.
ஆகவே இலங்கையர் என்ற உணர்வுடன் சிந்திக்க வேண்டும்.இந்த விடயத்தில் எமது கடமையை நிறைவேற்றுவோம்.தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும். ஜே.வி.பி.யையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இந்த அரசியல் வெற்றிடத்தில் ஜே.வி.பி.க்கு அதிக வாய்ப்புகள் உருவாகி வருகின்றது. அதனையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.