July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போர்க் கப்பல்கள் எண்ணிக்கையை உயர்த்தும் இந்தியா

2027 க்குள் போர்க் கப்பல்கள் 170 ஆக உயரும் என இந்திய கடற்படை துணைத் தளபதி தெரிவித்துள்ளார்.

விமானந்தாங்கி போர்க்கப்பல்,ரோந்து விமானங்கள், நீர்மூழ்கிகள் என சமபலத்துடன் கடற்படையை வலுவாக்க திட்டமிட்டிருப்பதாக இந்திய கடற்படை துணைத் தளபதி சதீஷ் நாம்தேவ் கோர்மடே கூறியுள்ளார்.

தற்போது ‌இந்திய கடற்படையில் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் உட்பட 130 கப்பல்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படையை வலுப்படுத்த 15 ஆண்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்ட கடற்படை துணைத் தளபதி, தற்போது போர்க்கப்பல், நீர்மூழ்கிகள் என 39 கப்பல்கள் கட்டப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

மேலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் கப்பல் வரும் 21-ம் திகதியும், கல்வாரி பிரிவைச் சேர்ந்த ஐ.என்.எஸ் வேலா நீர்மூழ்கி கப்பலும் வரும் 25-ம் திகதியும் கடற்படையில் இணைக்கப்பட உள்ளதாக கடற்படை துணைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம், வானில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட சிறப்பம்சங்களை கொண்டது.

இந்நிலையில் , 2027-ம் ஆண்டுக்குள் இந்திய கடற்படையில் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 170 ஆக உயர்த்தி, கடற்படையை வலுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.