July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதில் மாற்றத்தை மேற்கொள்ள ஆராய்வு!

எதிர்காலத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கண்டியில் இன்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

பாடசாலைகளில் கொவிட் சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், மாணவர்களை இரு குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.

நாட்டில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த திட்டம் விஸ்தரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

2.1 மில்லியன் தடுப்பூசி கையிருப்பு உள்ள நிலையில் மேலும் 14.5 மில்லியன் தடுப்பூசிகள் நாட்டுக்கு வர உள்ளன. எனவே மக்கள் தடுப்பூசி குறித்து சந்தேகிக்க தேவையில்லை எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.