நச்சு பக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்ட, சீனாவின் சேதன உர நிறுவனத்திற்கும் மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம் வழங்குவதற்கு, இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தினால் நவம்பர் 30 வரை நீடிக்கப்பட்டள்ளது.
நச்சு பக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்ட சீன உரம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட உர மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போது, உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியா மற்றும் ஏனைய நுண்ணுயிரினங்களின் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அந்த உரத்தை கொள்வனவு செய்யாதிருக்க இலங்கை அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டிருந்தது.
இதன்படி சீன நிறுவனம் மற்றும் அதன் உள்நாட்டு முகவருக்கு கடன் கடிதத்தின் கீழ் எந்தவொரு கொடுப்பனவும் வழங்கப்படுவதையும் நீதிமன்றம் தடுத்து உத்தரவிட்டிருந்தது.