File Photo
இலங்கையில் ஐந்து மாவட்டங்களில் கொவிட் தொற்றுக் கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம், அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறாக கொத்தணிகள் உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சுகாதார ஒழுங்குவிதிகளை மீறி குறித்த பகுதிகளில் நடைபெறும் திருமண நிகழ்வுகள், மத ஒன்றுகூடல்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளால் இந்த கொத்தணிகள் உருவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் மக்கள் பொறுப்புணர்வுடன் சுகாதார ஒழுங்குவிதிகளை பேணி நடந்துகொள்ள வேண்டும் என்றும், இல்லையோல் நாட்டில் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலைமை உருவாகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.