June 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடை செய்யப்பட்ட களை நாசினிகளுடன் யாழில் இருவர் கைது!

தடை செய்யப்பட்ட களை நாசினிகளுடன் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இந்த களைநாசினி கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 1,251 களை நாசினி பொதிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மன்னார் – வங்காலை மற்றும் யாழ்ப்பாணம் சங்கானை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.