January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் சந்திப்பு

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர்கள் குழு, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான பிரிவின் அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர்.

இலங்கையின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக உலகளாவிய குற்றவியல் நீதிக்கான பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளை மேம்படுத்துவதற்கு சிறுபான்மை இனக் குழுக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் கவலைகளைக் கேட்டறிந்துகொள்வது அவசியமாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்திப்பில் உலகத் தமிழ்ப் பேரவையின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

ஜனநாயகம், மனித உரிமைகளுக்கான பிரிவினரோடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்ட நிபுணர்கள் குழு கலந்துரையாடியுள்ளது.