
பொருளாதார மீட்சியில் எமக்கும் இலங்கைக்கும் உதவ முன்வாருங்கள் என்று மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் சாலிஹ் சர்வதேசத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கைக்கு இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த மாலைதீவு ஜனாதிபதி வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாலைதீவு மற்றும் இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலாத்துறையில் தங்கியிருப்பதாகவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் மாலைதீவின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதன் ஊடாக நிலைபேரான அபிவிருத்தியை உறுதி செய்ய முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடுகளின் புலனாய்வு ஒத்துழைப்பில் தேசிய பாதுகாப்பு தங்கியிருப்பதாகவும், பாதுகாப்பு விடயத்தில் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.