January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பிரதமர் மகிந்த

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ, தனது 76 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றார்.

தனது தந்தையின் பிறந்தநாளை குடும்பத்தாருடன் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

”எனக்கும் எனது தம்பிமாருக்கும் ஒரு சிறந்த தந்தையாக நாம் இன்று இருக்கும் நிலைக்கு எங்களை உயர்த்த நீங்கள் எடுத்த முயற்சிகளை எப்போதும் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூர்கிறேன்.” என நாமல் ராஜபக்‌ஷ பதிவிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”சிறுவயதில் இருந்து உங்களோடு வளர்ந்த எங்களுக்கு, உங்களின் மனிதாபிமானம் வியப்பான விடயமில்லை. இதுவரையில் ஆயிரக்கணக்கான மக்களின் பெரும் மரியாதை உங்களின் மக்கள் நல தொண்டுதான் என்றால் அது மிகையாகாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.