February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இசை நிகழ்ச்சி நடத்தத் தயாராகிறார் யொஹானி

இலங்கையின் இளம் பாடகியான யொஹானி டீ சில்வா ஐக்கிய அரபு இராச்சியத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் தயாராகி வருகிறார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய தினத்தன்று டுபாய் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யொஹானியின் மெனிகே மகே ஹிதே பாடல் யூடியுபில் 180 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

“மீண்டும் டுபாய்க்குத் திரும்புவது ஆச்சரியமாக உள்ளது” என்று யொஹானி தெரிவித்துள்ளார்.

டுபாயில் உள்ள தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களை இலக்கு வைத்து இந்த இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.