60 அத்தியாவசிய மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சு, 60 அத்தியாவசிய மருந்துகளை சேர்ந்த 131 மருந்து வகைகளுக்கு இவ்வாறு அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த மருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுமாயின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கட்டுப்பாட்டு விலையை மீறி மருந்துகள் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் complaints@nmra.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக அறிவிக்க முடியும் என அமைச்சின் செயலாளர் வைத்தியர் ஆர்.எம்.எஸ்.கே ரத்நாயக்க தெரிவித்தார்.
டொலரின் பெறுமதி அதிகரித்த கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நூற்றுக்கு 9 சதவீதத்தால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.