இலங்கையின் கலாநிதி வஜிர சித்ரசேனவுக்கு இந்தியாவின் பத்மஸ்ரீ விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் பிரசன்னத்துடன் நடைபெற்ற நிகழ்வில் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே விருதைக் கையளித்துள்ளார்.
இந்தியா இலங்கை இடையிலான கலாசார உறவுகள் மேலும் வலுவடைவதற்கு கலைத்துறை மூலம் பெறுமதியான பங்களிப்பை வழங்கியமைக்காக கலாநிதி வஜிர சித்ரசேன கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை இலங்கையைச் சேர்ந்த மூன்று முக்கிய பிரமுகர்களுக்கு இந்தியாவின் உயர்ந்த குடியியல் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கு, இந்தி மொழி மற்றும் இந்திய கலாசார துறையில் பங்களிப்புக்காக அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருது இம்மாத முற்பகுதியில் இந்திய ஜனாதிபதி வழங்கப்பட்டது.
மறைந்த தனது தாயார் சார்பாக வத்சலா தசநாயக்கே இஷ்தவீர, ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவ்விருதினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.