November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்களின் எதிர்ப்பால் யாழ். மாதகல் காணி அளவீட்டுப் பணிகள் கைவிடப்பட்டன

யாழ். மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளன.

மாதகல் ஜே 150 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அக்காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகளை இன்றைய தினம் முன்னெடுக்க இருந்தனர்.

காணிகளை அளவீடு செய்வதற்காக நில அளவைத் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் வருகை தந்தபோது, காணி உரிமையாளர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, காணி அளவீட்டுப் பணிக்கு வந்தவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.