இலங்கையின் டொலர் தட்டுப்பாடு நீடித்தால், பருப்பு இறக்குமதியும் தடைப்படலாம் என்று வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிலை ஒரு தீர்க்கமான கட்டத்தில் இருப்பதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய உற்பத்திகளைப் பலப்படுத்துவது அன்றி நாட்டை முன்னேற்றுவதற்கு வேறு வழியில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டுக்கு டொலர் ஈட்டுவதற்கான வரவு செலவுத் திட்டம் சரியாக இருந்தால் தான் தற்போதைய சிக்கலில் இருந்து மீள முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாம் பானுக்கும் பருப்புக்கும் பழகியிருந்தாலும், இங்கு ஒரு பருப்பு விதைகூட பயிரிடப்படுவதில்லை.
டொலர் தட்டுப்பாடு தொடர்ந்தால், பருப்பு இறக்குமதியும் தடைப்படும். அப்போது எமது வழக்கமான நடைமுறைகள் சவாலுக்கு உட்படுத்தப்படும்”
என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.