January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குண்டுத் தாக்குதல் தொடர்பில் பொலிஸாருக்கு போலி தகவல் வழங்கிய நபர் கைது!

எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்துக்கு குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸாருக்கு போலி தகவல் வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம், குண்டுத் தாக்குதல் அபாயம் இருப்பதாக கடதாசியில் குறிப்பெழுதி, வழங்கியுள்ளார்.

சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகத்துக்குரிய குறிப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு தலைமை அதிகாரி பொலிஸில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கொழும்பு குற்றப் பிரிவு இதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.