இலங்கையில் கஞ்சா செய்கையை ஊக்குவித்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டிய தேவையிருக்காது என்று எதிர்க்கட்சியில் இருந்து ஆளுங்கட்சிப் பக்கம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
2025 ஆம் ஆண்டளவில் கஞ்சாவுக்கான உலக சந்தை மதிப்பு 8.6 பில்லியன் முதல் 10.5 பில்லியன் அமெரிக்க டொலர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பெரும்பாலான மருந்துவ பயிர்களை முறையாக பயிரிட்டு, ஏற்றுமதி செய்து, அந்நியச் செலாவணியைப் பெற முடியும். நாம் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல வேண்டியதில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் வெளிநாடுகளிடம் கடனை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் டயனா கமகே தெரிவித்துள்ளார்.