May 2, 2025 4:50:27

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸாரின் செயற்பாடுகளை கண்டித்து எதிர்க்கட்சியினர் சபையில் ஆர்ப்பாட்டம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று காலை பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்திற்கு எதிராக நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்ள வந்த தமது ஆதரவாளர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தே சபையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் உத்தரவின்படியே பொலிஸார் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, சபையில்  தெரிவித்தார்.

சபையில் இன்று காலை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தால் சிறிது நேரம் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.