
இரத்தினபுரியில் உள்ள முன்னணி பேக்கரி ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பேக்கரி ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததன் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
குறித்த சம்பவத்தில் பேக்கரியில் வேலை செய்த பெண் ஒருவரே பலத்த காயங்களுக்கு உள்ளானதோடு, மேலும் சிலர் சிறியளவில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வெடி விபத்தில் குறித்த கடைக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.