
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மூவர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது.
அங்கொடை – ஐடிஎச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த, 41 வயதுடைய ஆண் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற 19 மற்றும் 75 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் இதுவரையில் 8,413 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 4,043 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இலங்கையில் கடந்த ஒருவாரத்துக்குள், கொரோனா வைரஸால் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.