
மத்திய வங்கியால் முன்மொழியப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்தை அரசாங்கம் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
“பெட்ரோல் அல்லது டீசல் காரைப் பயன்படுத்தக் கூடியவர்களின் எரிபொருளை ஈடுகட்ட பொது நிதியைப் பயன்படுத்துவது பொருத்தமானதல்ல” எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நீதி அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார்.
இந்த முறையை செயல்படுத்துவதன் மூலம் உலக சந்தையில், எரிபொருளின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அதனை மாற்றி அமைக்க முடியும் என அவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
எரிபொருளுக்கான வரியை ஏழைகள் உட்பட அனைத்து மக்களும் செலுத்த வேண்டும் என்றும், எரிபொருள் துணை நிறுவனத்திற்கு பொது நிதியைப் பயன்படுத்துவது பொருத்தமானதல்ல என்றும் அவர் கூறினார்.
“வரி செலுத்தப்படும் போது, அது ஏழைகள் உட்பட அனைத்து மக்களின் பணத்தில் இருந்து செலுத்தப்படுகிறது. எனவே இவ்வாறு பொது நிதியை பயன்படுத்துவது பொருத்தமானது அல்ல” எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தினார்.