ஊழல் இல்லாத மக்கள் ஆட்சியை நிறுவுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
‘சாபமிக்க அரசாங்கம்’ என்ற தலைப்பிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே, எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசத்துக்கான பொறுப்பை ஏற்று, தேசத்தைக் கட்டியெழுப்பும் தூர நோக்குள்ள பயணத்தை முன்னெடுப்போம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று பொதுமக்கள் தமது அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிசையில் நிற்கவேண்டிய காலம் ஒன்று உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பை நிறுத்திவிட்டு, ஊழல் வழியில் எரிபொருளை இறக்குமதி செய்ய முயற்சிப்பதாகவும் சஜித் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆயிரமாயிரம் சவால்கள், எண்ணற்ற தடைகளுக்கு மத்தியில் வந்த மக்கள் திரள் சர்வாதிகார அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஆரம்பம் என்பதை நிரூபித்துள்ளதாகவும், மாபெரும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்துள்ளார்.
நாட்டை வெல்லும் மக்கள் போராட்டத்தை ஆரம்பிப்போம் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.