கொரோனாவால் மரணித்தவர்களை ஓட்டமாவடிக்கு கொண்டு செல்லும் தீர்மானத்தைக் கைவிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தண்ணீரின் மூலம் கொரோனா பரவுகிறது என்பது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், குறித்த தீர்மானத்தை கைவிடும்படி அவர் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானபூர்வமற்ற தீர்மானங்களின் மூலம் இரசாயன உரத்தைத் தடுத்ததன் விளைவை எதிர்வரும் பெரும்போகத்தின் பின்னர் அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அதேபோன்ற ஒரு நடவடிக்கையாகவே முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் தீர்மானமும் அமைந்துள்ளது.
தண்ணீரின் மூலம் கொரோனா பரவக்கூடும் என்பது விஞ்ஞானபூர்வமற்ற கருத்தாகும்.
விஞ்ஞானபூர்வமற்ற தீர்மானத்தைப் பயன்படுத்தி இப்போதும் ஜனாஸாக்கள் இரண்டு நாட்களின் பின்னரே ஓட்டமாவடிக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. இதனை இப்போதாவாது நிறுத்துங்கள்”
என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.