இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக பைசர் தடுப்பூசி வழங்கும் திட்டம் புதன்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதன்படி, புதன்கிழமை (17) முதல் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் கொவிட் தொற்றுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி விநியோகிக்கப்படும் என அவர் கூறினார்.
இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்று 3 மாதங்கள் நிறைவடைந்த 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
முதலாவது மற்றும் இரண்டாவது டோஸாக எந்த வகையான தடுப்பூசி போடப்பட்டாலும், மூன்றாவது டோஸாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறினார்.